திங்கள், 16 பிப்ரவரி, 2015

தீவிரவாதம் : இஸ்லாமும் முஸ்லிம்களும்

கெண்டகனில் நடந்த இருநாள் கருத்தரங்கம்

தேதி: 19-August-1980

கெமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அமைந்த கெண்டகனில் அரை எண் 123 - ல் கேமெரிக்க , கிஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்கள் தலைமையில் ஊடக / மீடியாக்கள்,  உளவு பிரிவுகள் கலந்து கொண்ட இரு நாள் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. மிகவும் சொற்ப / தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் புதிய வரவாக னேட்டோ நாடுகளின் தலைவரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன முக்கியமாக பெருகி வரும் இஸ்லாமிய எழுச்சி குறித்து அச்சமும், கவலையும் பகிரப்பட்டது. இதனிடையே இஸ்லாமிய வளர்ச்சியை மட்டுபடுதுவது / கட்டுப்படுத்துவது சம்பந்தமான காரசாரமான விவாதங்கள் நடந்தது. முடிவில் "தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம்" என்ற அடிப்படையின் கீழ் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளை முன்னேடுப்பதாவும் அதற்க்கு முகாந்திரமான நடவடிக்கைகளை மீடியாவின் மூலமும், உளவு அமைப்பின் ஒரு சில அரசியல், மத ரீதியான கொலைகளின் மூலம் முன்னெடுப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.  எனவே கீழ்க்கண்ட விஷயங்களில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உறுப்பு நாடுகளிடையே ஏகோபித்த ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ரகசிய சுற்றுக்கு விடப்பட்டது.

தீர்மானத்தின் சாரம்:

தீவிரவாத குற்றச்சாட்டு மூலம்:
1. இஸ்லாத்தை / முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துவது.
2. தீவிரவாத செயல்களை செய்து முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் நாடுகள் மீதும் பழிபோடுவது.
3. தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி முஸ்லிம் நாடுகள் மீது படையெடுத்து அதனை கட்டுபடுத்துவது (தூதரகங்கள் மற்றும் வேற்று நாட்டினரின் மக்கள், தொழிற்சாலைகளில் தாக்குதலை மேற்கொண்டு முஸ்லிம்கள் மீது பழி போடுதல்).
4. தீவிரவாத செயல்களை செய்ய இஸ்லாத்தில் ஆர்வமில்லாத முஸ்லிம்களை தேர்ந்தெடுப்பது.
5. தீவிர இஸ்லாமிய செயற்பாட்டாளர்களை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்து சமூகத்திலிருந்து  அவர்களை தனிமைப்படுத்துவது.
6. முஸ்லிம்களை கோபமூட்டும் படியான செய்திகளை, செயல்களை செய்து அவர்களை வன்முறை செயல்களில் ஈடுபட வைத்து பிற சமூக மக்களிடையே வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், பிரிவினை வாதிகள், சகிப்புத்தன்மையற்றவர்கள்  என பிற சமூக மக்களிடையே எண்ணங்கள் ஏற்பட வகுத்தல்.

ஊடகங்களின் மூலம்:
1. உலக மீடியாவினை ஒருங்கிணைத்து செய்திகளை பகிர்தல்.
2. மீடியாவில் முஸ்லிம்களுக்கெதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் முடிந்தவரை இஸ்லாம் / முஸ்லிகளுக்கு ஆதரவான செய்திகளை மட்டுப்படுத்துவது.
3. குற்றச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களின் குற்றச் செயற்பாட்டினை கூடுமான அளவு செய்திகளுடன் தருவது, இதன் மூலம் மற்ற சமுக மக்களுடைய வெறுப்பினை அடைய வைத்தல்.

கொள்கைகளில் குழப்பம் செய்வதின் மூலம்:
1. முஸ்லிகளிடையே மார்க்க ரீதியில் பிளவுபட உரியவர்களை இனங்கண்டு பயிற்றுவித்து இயக்கங்களை ஏற்படுத்தி கருத்து முரண்பாடு மற்றும் மோதல்கள் ஏற்பட வழிவகுத்தல்.
2. இஸ்லாமில் வேறுபாடு உள்ள பிரிவுகள் மற்றும் காதியானி, ஷியா, இஷ்மாயிலிய்யா போன்ற கொள்கை முரண்பாடு உடையவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அணைத்து செயல்பாடுகளுக்கும் ஆதரவு மற்றும் ஊக்கமளிப்பது.

உளவு அமைப்புக்களின் மூலம்:
1. நாடுகளில்  ரகசிய சிறைச்சாலைகளை ஏற்படுத்தி இஸ்லாத்தில் தீவிரமாக செயல்படுபவர்களை கடத்தி வந்து அவர்களுடைய செயல்களை மட்டுபடுதுதல் மற்றும் அங்ககீனப்படுதுதல்.
2. ரகசிய உளவு அமைப்புகளின் மூலம் மற்ற நாடுகளின் உளவு அமைப்புகளோடு தொடர்பு கொண்டு இஸ்லாமிய செயற்பாட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது தேவையேற்படின் உளவு அமைப்புகளின் மூலம் அவர்களை ஒழித்துக்கட்டுவது
3. இஸ்லாமிய இயக்கங்களில் ஒற்றர்களை ஊடுருவ வைப்பதின் மூலம் அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் பிரிவுகள் / பிளவுகள் ஏற்படுத்தல், நீர்த்து போக செய்தல்.
4. முஸ்லிம்களிடையே ஆயுதக்குழுக்களை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிம் நாடுகளில் பிரச்சினை ஏற்படுத்த வழிவகுத்தல்.

தீர்மான சுற்று கிடைக்கப்பெற்றோர்:
1. கேமெரிக்க அதிபதி.
2. கேமெரிக்க வெளியுறவு கொள்கை வகுப்பாளர்.
3. கேமெரிக்க உளவு அமைப்பு
4. கிஸ்ரேலிய அதிபர் மற்றும் கேசாத் உளவு அமைப்பு
5.  நட்பு நாடுகளின் உளவு அமைப்புக்கள் (M5,ரா,கேஜிபி)
6. ராய்ட்டர், எ.எப்.பி, மற்றும் ஸ்டார்  செய்தி நிறுவனம்.
7. ப்ரீமேசன் அமைப்பு

குறிப்பு:  இது கற்பனையாக எழுதப்பட்ட ஒன்றே. ஆனால் இஸ்லாமை தீவிரவாதத்தோடு முடிச்சி போட்டு இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க இப்படி ஒரு  ஏற்பாடு நடந்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று.

-- முகவைதம்பி

புதன், 28 ஜனவரி, 2015

பாகிஸ்தான் : தோல்வியடைந்த நாடா?


பாகிஸ்தானை, பாகிஸ்தானிகளை பற்றி செய்தித்தாள்களில் ஒவ்வொரு நாளும் கெட்டதாகவே வருகிறது. நல்லதாக எதாவது செய்தி வருவதென்பது ஆச்சரியம் தான். எனக்கென்னவோ சில சமயங்களில் இதை சதி செயலாகவோ, மீடியாவின் தீவிரவாதமாகவோ தான் பார்க்கிறேன். செய்திகளில் உண்மை இருக்கலாம் ஆனால் மிகைப்படுத்தப் படுகிறதோ என எண்ணத்தான் தூண்டுகிறது. இந்தியாவினுடைய மற்றும் இஸ்ரேல் அமெரிக்க உளவு அமைப்புக்கள் 'பாகிஸ்தான் ஒரு மூட முல்லாக்கள் மற்றும் கிரிமினல்கள் நிறைந்த நாடு' என்பதை நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இந்திய நாட்டு மக்கள் மத்தியில் விதைப்பதில் தீவிர ஆர்வம் உடையது போலவே தெரிகிறது.

பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவிலிருந்து பிரிந்த சமயத்தில் எங்களை போன்றவர்கள் இது இஸ்லாமிய வழியில் ஆட்சி செய்து அது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் பாகிஸ்தானை தற்பொழுது பார்க்கும் போல் அது  இனவாதத்துக்கு தானே தவிர இஸ்லாத்திற்காக பிரிந்தது அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியாவில் ஏதாவது ஒரு பயங்கரவாத தீவிரவாத ஏன் பிளாக் நோய் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டாலும் அதை குறிப்பாக பாகிஸ்தானுடன் / பங்களாதேஷுடன் தொடர்பு படுத்தி செய்தி வருவதில் இந்திய மீடியாக்களுக்கும், அரசுக்கும், இந்துத்துவாவினருக்கும் அலாதி பிரியம்.  ஏன் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு எதிராக ஏதும் சதிச்செயல் நடைபெறுவதில்லையோ? நடந்தாலும் அது ஒரு இந்து  தேசம். அதனால் இந்திய ஆளும் வர்க்கம் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.ஆனால் பாகிஸ்தானோ அல்லது பங்களாதேஷோ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக கொண்ட நாடுகள் அதனாலேயே மீடியாக்கள் அரசாங்க ஆதரவோடு அச்செய்திகளை பெரிதாக்குகின்றன என நினைக்கின்றேன்.
இதனுள்ளே மேலும் பல செய்திகள் அடங்கியுள்ளன. என்னவென்றால் இந்திய நாட்டில் வாழக்கூடிய பெரும்பான்மையான மக்கள் இந்து என்ற நிலையில் ஐக்கியபடுதப்பட்டாலும் அவர்களுக்குள்ளே நிற, இன வர்க்க பேதங்கள் தலை தூக்கி உள்ளன. இது இந்து மதத்தினுடைய பெரும் பிரச்சினை. இதை சரி செய்யவே முடியாது. ஏனென்றால் இந்து மதத்தின் கொள்கைகளும் மற்றும் பார்ப்பனீய / பணீயா சாதிகளுடைய கடுமையான போக்குகளாலும் இதை தடுக்க முடியாது. இந்த நிலையில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் மூதாதையர் மூலம் இம்மதத்தை தங்கள் சமயமாக எடுத்துக் கொண்டாலும் இதிலிருந்து வெளிவர முயன்றாலும் பல்வேறு காரணிகளால் அது தடைக்கல்லாகவே இருக்கின்றன. உதாரணமாக இந்து மதத்திலிருந்து வெளியேறி  மாற்றுப் பாதையில் பயணிக்கலாம் என மக்கள் நினைத்து அதற்கு வடிகால் தேடும்போது அதற்கு இஸ்லாம் சிறந்ததாக தோன்றினாலும் பொதுவாக தீவிரவாதம் அதிலும் பாகிஸ்தானிய பயங்கரவாதம் (?) போன்றவை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால் அந்த எண்ணத்தை கைவிடுகின்றனர். எனவே இம்மாதிரியான எண்ணங்கள் மக்களின் மனதில் ஏற்படவேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காகவே இது மாதிரியான நேர்மறையான செய்திகள் வருகிரதோ என எண்ணத் தோன்றுகிறது.

அதே சமயம் அவர்களும் ஒரு சிறந்தவர்களாக முன்மாதிரி முஸ்லிம்களாக நடக்கவில்லை. பொதுவாக எல்லா நாட்டு மக்களிலும் நல்லவர்களும் உண்டு தீயவர்களும் உண்டு. பாகிஸ்தானை பார்த்தோமென்றால் உலக அளவில் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கலாகவே காண்கிறோம். போதை பொருட்கள் கடத்தல், பாலியல் பிரச்சினையில், திருடு கொள்ளையடித்தலில் கொலை செய்வதில் அவர்கள் மிக அதிகமாக ஈடுபடுகிறார்கள்.

கிட்டதட்ட 16 வருடம் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருபவன் என்ற முறையில் அதிகளவு அவர்கள் செய்யும் குற்றங்களை பத்திரிக்கைகள் மூலமும், நண்பர்கள் மூலமும் நேரிடையான ஒரு சில சம்பவங்கள் மூலமும் கேட்டும் பார்த்தும் வருகிறேன். முன்பு அரபு அமீரக ஷார்ஜாவில் பணிபுரிகையில் பல கொள்ளை கொலை சம்பவங்களில் அவர்களின் பங்கு மிக அதிகமாக இருந்ததை கண்டேன். அச்சமயத்தில் பத்திரிக்கையில் பாகிஸ்தானி ஒருவன் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது.  அது சம்பந்தமாக போலிசின் தொடர்ச்சியான விசாரணையில் அவனுடன் தங்கியிருந்த சக பாகிஸ்தானி நாட்டவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஓரினச் சேர்க்கை விசயமாக அவன் கொல்லப்பட்டதாக வாக்கு மூலம் கொடுத்தனர். இதைபோன்றே எத்தனையோ பாலியல் ரீதியான குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள்,

அதுபோல போதை பொருட்கள் கடத்தலில் பங்கு பெறுபவர்கள் அதிகம் அவர்களே. சென்ற ஆண்டும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் போதை பொருட்கள் கடத்தலுக்காக சவுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட நாட்டவர்களில் அதிகம் பாகிஸ்தானிகளே.

அதுபோல ஊழல் செய்வதிலும் அந்த நாடு முதல் 25 நாடுகளுக்குள்.
இன்னும் தற்கொலைப் படை / வெடிகுண்டு நிரப்பிய வாகனங்களை கொண்டு மக்கள் நடமாட்டம் நிரம்பிய இடங்களில் வெடிக்க செய்தல், ஷியா - சுன்னா பிரச்சினைகள், இப்படி பிரச்சினைகள் நிரம்ப உள்ள பூமியாக பாகிஸ்தான் காட்சி அளிக்கிறது. இது இந்திய ரா உளவு அமைப்பினுடைய வேலையாக இருக்கலாம். பாகிஸ்தான் காஷ்மீர் விசயத்தில் விடாப்பிடியாக இருப்பதால் இந்திய அரசு பாகிஸ்தானை நிலை குலைய வைக்க இஸ்ரேல் மொசாத்+ரா உதவியோடு அப்பப்ப அங்கு இது போல குண்டு வெடிப்புகள் செய்து வருவதாகவும் இருக்கலாம். இப்படி பாகிஸ்தானில் எது நடந்தாலும் இங்குள்ள இந்துத்துவாவினர் இச்செயல்களை  இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை ஒரு அச்சத்துடனே  வைத்திருக்கின்றனர்.

எனவே இது போன்ற விஷயங்களால் எப்படி பார்த்தாலும் பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த ஒரு நாடாகவே தோன்றுகிறது.

-- முகவைதம்பி